சினிமா

பீட்சா, ஜிகர்தண்டா படங்களின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், தரமான சுயாதீன மற்றும் குறும் படங்களை வெள்ளித் திரைக்கு கொண்டு வருவதில் பேராதரவு அளித்து வருகிறது. சென்ற ஆண்டு தமிழ் திரைப்பட வரலாற்றில் புதுமை படைக்கும் வகையில், திரு. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஐந்து புதிய இயக்குனர்களின் கதைகளை, பெஞ்ச் டாக்கீஸ் எனும் தலைப்பில் – சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில், மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து, இம்முறை, பெஞ்ச் டாக்கீஸ்-ன் இரண்டாம் பாகம் அவியல் என்னும் தலைப்பில் வெளியாகிறது. அவியல், மக்களின் ரசனையை கவரும் விதத்தில் படைக்கப்பட்ட ஐந்து நகைச்சுவையான, ஜனரஞ்சகமான கதைகளின் கலவையாகும். இந்த படத்தில் நான்கு புதிய இயக்குனர்கள் – ஷம்மீர் சுல்தான், மோஹித் மெஹ்ரா, லோக்கேஷ் கனகராஜ், குரு ஸ்மாரன் மற்றும், ப்ரேமம், நேரம் போன்ற வெற்றித் திரைப்பங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனின் கதைகளும் இடம் பெறுகிறது.
Tue-03-2016 , 01:00 PM


Copyright © 2014 ragamtv.com. All Rights Reserved